Can-your-short-child-grow-into-a-tall-adult_குழந்தைகள் வேகமாக வளர வேண்டுமா

குழந்தைகள் வேகமாக வளர வேண்டுமா…?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், குடும்ப உறவுகளின் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குடும்பத்தினரின் உயரத்தை பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கும். எனினும் சில உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படலாம்.

அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும். சில எளிமையான பயிற்சிகளில் ஈடுபட ஊக்குவிப்பது, அவர்கள் உயரமாக வளர்வதற்கு தூண்டுகோலாக அமையும்.

அதற்கு செய்ய வேண்டிய சில பயிற்சிகள்:

* சிறு வயது முதலே உடற்பயிற்சி செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். அவை எளிமையானதாக இருந்தால் ஆர்வமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். நன்றாக நிமிர்ந்த நிலையில் நின்றபடி, உடலை வளைத்து குனிந்து கைகளை கொண்டு கால்களின் விரலை தொடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இது முதுகு மற்றும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும். தொடைகளில் இருக்கும் தசைகளையும் இலகுவாக்கும். தினமும் கால் விரல்களை தொடும் பயிற்சிகளை செய்வது உயரமாக வளர்வதற்கு தூண்டிவிடும்.

* கிராமப்புறங்களில் குழந்தைகள் மரக்கிளைகளில் தொங்கி விளையாடுவார்கள். அப்படி தொங்குவது உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இரு கைகளையும் வலுவாக பிடித்தபடி தொங்கும்போது கைகளின் தசைகள் நெகிழ்வடையும். தசைகளின் வளர்ச்சியும் தூண்டப்படும். உயரத்தை அதிகரிக்கவும் உதவும்.

* ஸ்கிப்பிங் செய்வதும் உயரத்தை அதிகரிக்க தூண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக ஸ்கிப்பிங் அமைந்திருப்பதால் அதில் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். ஸ்கிப்பிங் கயிற்றில் துள்ளிக்குதித்து பயிற்சி செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் தசைகள், செல்கள் தூண்டப்படும். குறிப்பாக செல்களின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். சீரான வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் ஸ்கிப்பிங் உதவும்.

* நீச்சலும் தசைகளை நெகிழ்வுத்தன்மை அடைய செய்யும் பயிற்சிகளுள் ஒன்று. இதுவும் உடலில் உள்ள செல்களை தூண்டிவிடும். நீச்சல் அடிக்கும்போது உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளும் தூண்டப்படும். அதனால் நீச்சல் பயிற்சி, இயற்கையாகவே குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கக்கூடியது.

Related Posts

Leave a Comment

Translate »