Ammini-kozhukattai-Kozhukattai-Sundal-Mani-kozhukattai_சத்தான ஸ்நாக்ஸ் கொழுக்கட்டை சுண்டல்

சத்தான ஸ்நாக்ஸ் கொழுக்கட்டை சுண்டல்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்

தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

அதில் 1 சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.

மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

இந்த உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக வேகவைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

சூடான கொழுக்கட்டை சுண்டல் தயார்.

Related Posts

Leave a Comment

Translate »