கொரோனா பெருந்தொற்றால் பலர் வேலையை இழந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சுயதொழில் தொடங்கலாமா என்று பலரது எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது. வேலை போய்விட்டதே என்று முடங்கி விடாமல், உங்களுக்கு பிடித்த தொழிலை செய்யுங்கள் வாழ்க்கை நிச்சயம் வெற்றிபாதையில் பயணிக்கும்.
மாறிய இன்றைய புதிய உலகிற்கு நமக்கு கை கொடுப்து சுய தொழில் தான். அத்தகையை சுயதொழில்கள் எண்ணிடங்கானவை உள்ளது. அதில் ஒன்று தான் சாக்லேட் தயாரிப்பு தொழில்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. எனவே சாக்லேட்டுக்கு சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. ஆகையால் நீங்கள் துணிந்து இந்த தொழிலில் கால் பதிக்கலாம்.
வீட்டிலேயே குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய சாக்லேட் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்த சிறு தொழிலை பொறுத்தவரை யாருவேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடி செய்யலாம் நல்ல லாபம் தரும் தொழில். இதுபற்றிய விவரம் வருமாறு:
இடவசதி, முதலீடு
இந்த சாக்லேட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்தபடியே ஒய்வு நேரங்களில் செய்யலாம் என்பதால் வீட்டில் சிறிய அறை இருந்தால் போதுமானது. மேலும் ஒரு கிலோ சாக்லேட் தயார் செய்ய முதலீடாக ரூ. 200 முதல் 300 ரூபாய்க்கு குறைவாகவே செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். அதன பிறகு chocolate mold tray அவசியம் இந்த தொழிலுக்கு தேவைப்படும். இந்த அச்சுகள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் பல டிசைன்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருளாக சர்க்கரை, உணவு வண்ணம், சோள கருதினால் செய்யப்பட்ட பாகு (corn syrup) அல்லது cough syrup, பேக்கிங் கவர் ஆகியன ஆகும்.
தயாரிப்பு முறை
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் மற்றும் இரண்டு கப் சர்க்கரைக்கு 3 ஸ்பூன் என்ற அளவு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை பாகானது தேன் பதத்திற்கு வந்த பிறகு ஏதாவது ஒரு உணவுக்கான வண்ணம்( food colour) ஒன்றை அவற்றில் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். பின் அடுப்பில் இருந்து இறக்கி chocolate mould tray அச்சுகளில் ஊற்ற வேண்டும் பின் சிறிது நேரம் ஆறவிடவும். பின் அச்சுகளில் இருந்து சாக்லேட்டுகளை தனியாக எடுத்து பேக்கிங் செய்து,. பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.
சந்தை வாய்ப்பு
தாங்கள் தயார் செய்த இந்த சாக்லேட்டுகளை தங்கள் ஊரில் உள்ள சிறிய பெட்டி கடைகள், மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். சந்தையில் அதிக வரவேற்பு உள்ள தொழில் என்பதால் தாங்கள் தயார் செய்யும் சாக்லேட்டுகள் மிக எளிதாக விற்பனையாகிவிடும். இந்த தொழில் பொறுத்தவரை 1 கிலோ சாக்லேட்டுக்கு ரூபாய் 200 முதல் 250 வரை வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் இருந்து செய்யக்கூடிய சிறந்த சுயதொழில்.