Wheat-Rava-Vegetable-Salad_கோதுமை ரவை வைத்து சூப்பரான சாலட் செய்யலாம் வாங்க..

கோதுமை ரவை வைத்து சூப்பரான சாலட் செய்யலாம் வாங்க..

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – கால் கப்

 வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் – தலா ஒன்று

ப்ராக்கோலி – பாதியளவு

தக்காளி – 2

ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 2 பல்

எலுமிச்சைச் சாறு –  2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

வறுத்த பாதாம்பருப்பு – 10

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப    

ஆரோக்கியமான சாலட் வகைகள்

செய்முறை:

கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

கோதுமை ரவை வெஜிடபிள் சாலட் ரெடி.

குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்.

Related Posts

Leave a Comment

Translate »