Mappillai-Samba-Rice-Kanji_மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

மாப்பிள்ளை சம்பா அரிசி – 100 கிராம்,

 தண்ணீர் – 100 மில்லி,

மோர் – 50 மில்லி,

சின்ன வெங்காயம் – 8 ,

பச்சை மிளகாய் – ஒன்று ,

கறிவேப்பிலை – சிறிதளவு,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »