நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். எதிரில் மூன்றடி தூரத்தில் மற்றொரு நாற்காலியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கால்களையும் மெதுவாக எதிரில் உள்ள நாற் காலியில் நீட்டவும். இப்பொழுது கைகளை தலைக்குமேல் உயர்த்தி மெதுவாக மூச்சை வெளிவிட்டு கால் பெரு விரலை கைகளால் தொடவும் தலையை மெதுவாக முட்டை நோக்கி சாய்க்கவும். பத்து விநாடிகள் முதல் இருபது விநாடிகள் சாதாரண மூச்சில் இருக்கவும். பின் மெதுவாக கைகளை தலையை உயர்த்தி சாதாரண நிலைக்கு வரவும். இதே போல் ஐந்து முறைகள் பொறுமையாக செய்ய வேண்டும்.
இந்த ஆசனம் நாற்காலியின் உதவியால் அழகாக நாம் செய்துவிட முடியும். இதன் பலன்கள் அளவிடற்கரியது. கணையம் மிக நன்றாக இயங்கும். சிறுநீரகம், சிறுநீரகப் பை நன்கு சக்தி பெற்று இயங்கும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் சரியாகும். ஜீரண மண்டலம் நன்றாக இயங்கும். வயிற்று உள் உறுப்புக்கள் அனைத்தும் பிராண சக்தி பெற்று மிகச் சிறப்பாக இயங்கும்.
பொறுமையாக, நிதானமாக இந்த ஆசனத்தை இரு நாற்காலியின் உதவியால் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும்.