விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் சுண்டு விரலை மடித்து அதன் நகக்கண்ணில் கட்டை விரலை வைக்கவும். படத்தை பார்க்கவும்.
இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் கண்களை திறந்து கைகளை சாதாரணமாக வைக்கவும். காலை, மாலை இரு வேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
கை விரல் நுனிகளை இணைப்பதின் மூலம் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் சக்தி கிடைக்கின்றது. அதில் உள்ள குறைபாடு சரிசெய்யப்படுகின்றது. நாம் நீர் மூலகம் சரி செய்யும் முத்திரை செய்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும்.