Warning-signs-indicate-excessive-exercise_அதிகமாக உடற்பயிற்சி செய்வதை வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகள்

அதிகமாக உடற்பயிற்சி செய்வதை வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற் பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை வழங்கினாலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது. அதிகப்படியான உடல் செயல்பாடு தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். அதி தீவிரமான பயிற்சி நிகழ்வுகளின்போது மாரடைப்பு போன்ற கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடல் வெளிப்படுத்தும் ஒருசில அறிகுறிகளை கொண்டே கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வதை யூகித்துவிடலாம்.

* உடற்பயிற்சிக்கான வரம்பை கடந்து கடுமையாக பயிற்சி செய்யும்போது காயம், மூட்டுவலி, உடல் வலி போன்றவை ஏற்பட வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் ஒவ்வொன்றும் நீங்கள் மிகவும் கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை குறிப்பிடும். உடற்பயிற்சி செய்யும்போது ஆரம்ப காலத்தில் ஓரிரு நாட்கள் இத்தகைய அறிகுறிகளை அனுபவிப்பது இயல்பானது. ஆனால் தொடர்ந்து தசை வலியை அனுபவித்தால் நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

* உடற்பயிற்சி செய்யும்போதோ, அதற்கு பிறகோ எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா? உடற்பயிற்சியின்போது போதிய கவனம் செலுத்த முடியவில்லையா? ஆம் எனில் அதுவும் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதன் வெளிப்பாடாக அமையலாம். நாள்பட்ட சோர்வு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சோர்வை ஏற்படுத்தும்.

* மிதமான உடற்பயிற்சி, நோய் எதிர்ப்பு அமைப்புக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும். ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொண்டால் அது அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாக அமையலாம்.

* தூங்கி எழுந்த பிறகும், ஓய்வெடுக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தாலோ, தொடர்ந்து 4-5 நாட்கள் அதே நிலை நீடித்தாலோ அது அதிக உடற்பயிற்சி செய்ததால் அனுபவிக்கும் ஆபத்தின் வெளிப்பாடாகும்.

* அடிக்கடியோ, அதிகமாகவோ உடற்பயிற்சி செய்வது மூட்டு வலி, எலும்பு முறிவு, மென்மையான திசு காயங்கள் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்க உடற்பயிற்சி கவுன்சிலின் கருத்துபடி, அடிக்கடி ஏற்படும் காயம் உடலில் ஏதோ தவறு நடந்ததற்கான அறிகுறியாகும்.

* சில நேரங்களில், கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அது எடை அதிகரிக்க வழிவகுக்கும். அதிகமாக உடற்பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் உடல் பருமன் பிரச்சினை உண்டாகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் தசை திசுக்களின் இழப்பு, எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான தொப்பை கொழுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

* நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். அதிக பயிற்சியினால் தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். அதனால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும்.

Related Posts

Leave a Comment

Translate »