PCOS-PCOD-Polycystic-ovary-syndrome-treatment_கருப்பையில் உருவாகும் நீர்கட்டிகளை கட்டுப்படுத்துவது எப்படி

கருப்பையில் உருவாகும் நீர்கட்டிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனும் கருப்பை நீர்கட்டி பிரச்சினையால், பெரும்பாலான பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தாய்மை அடைவதில் சிக்கல், முறையற்ற மாதவிடாய், அதிகமான உதிரப்போக்கு, உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சினை பருவ வயது பெண்கள் முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகவே உண்டாகிறது.

காரணம்:

மரபு வழியாகவும், மாறுபட்ட பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், உடல் பருமன் ஆகியவற்றின் மூலமும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

நோய்க்கான அறிகுறிகள்:

ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் அதிக அளவு முடிகள் வளருதல், உடல் எடை அதிகரித்தல், முடி உதிர்தல், எண்ணெய் வடியும் சருமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

கட்டுப்படுத்தும் வழிகள்:

ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான வாழ்வியல் மாற்றங்களின் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமைக் கட்டுப்படுத்தலாம்.

பி.சி.ஓ.எஸ்-சை கட்டுப்படுத்தும்  உணவுப் பொருட்கள்:

நார்சத்து உள்ள கோதுமை, பச்சை கேரட், கடலை, பட்டாணி, முழு தானியங்கள், காலிபிளவர், பீன்ஸ், பயறு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

புரதச்சத்து முக்கியமானது. கோழி, மீன், முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, விதைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான தக்காளி, மஞ்சள், வால்நெட் போன்றவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டவை. மேலும் கறிவேப்பிலை சட்னி, எள் சட்னி, பீட்ரூட் சட்னி ஆகியவற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வரலாம்.

தவிர்க்க வேண்டியவை:

* காபி, சோயா, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த உணவுகள், மைதா போன்றவற்றை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

* பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து, பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது.

தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »