Apple-Benefits_தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்

தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்..?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

‘தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்..! உடலுக்கு நல்லது, மருத்துவரையும் தவிர்க்கலாம்’ என்ற வாசகம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த வாசகத்திற்கு அடிகோலிட்ட இடம், சம்பவம் எது தெரியுமா..?

முன்பு ஆப்பிள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்தது. இரண்டாமிடத்தில் அமெரிக்கா இருந்தது. 1880-ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் சிவப்பு ஆப்பிள் மரங்களை நிறைய வளர்த்தார்கள். நிறைய புதுவகை ஆப்பிள்களையும் விவசாய ஒட்டுமுறையில் உருவாக்கினார்கள். இதில் ‘பென் டேவிஸ்’ வகை ஆப்பிள் எல்லா கடினமான வானிலையையும் தாக்குப்பிடித்து வளர்ந்தது. இந்த ஆப்பிள் மட்டும் நிறைய உற்பத்தி ஆனது.

நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1980-ம் ஆண்டில் அமெரிக்காவில் சிவப்பு நிற ஆப்பிளான ‘ரெட் டெலிசீயஸ்’ வாஷிங்டன் நகரில் அதிகமாக உற்பத்தி ஆனது. அப்போது சிவப்பு ஆப்பிளைச் சாப்பிடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள். இதுவே பின்பு ‘சிவப்பு ஆப்பிளைத் தினமும் சாப்பிடுங்கள்’ என்று ஒரு தினத்தை கடைப்பிடிக்கும் அளவிற்கு மாறியது. சரி, இந்த சம்பவம் இருக்கட்டும். ஆப்பிள் பழத்தில் ஏராளமான தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆப்பிள் பற்றி இன்னும் சுவாரசியமான விஷயங்களை பார்ப்போமா?

* ஆப்பிள்களில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 75 சதவீத ஆப்பிள்கள் ஜம்மு, காஷ்மீரிலேயே விளைகின்றன.

* ரெட் டெலிசீயஸ், கோல்டன் டெலிசீயஸ், மெக் இன்டோஷ், லால் அம்ப்ரி, சவுபாட்டியா அனுபம் ஆகியவை இந்தியாவில் விளையும் ஆப்பிள் ரகங்கள்.

* கஜகஸ்தானில் ஆப்பிள் மரங்கள் நிறைந்த காடு அல்மாட்டி நகரில் உள்ளது. அந்த ஊரின் பெயருக்கு ‘ஆப்பிள்களின் தந்தை’ என்று அர்த்தம்.

* பழத்தைவிடத் தோலில்தான் அதிகச் சத்து உள்ளது. அதனால் ஆப்பிள் சாப்பிடும்போது தோலுடன் சாப்பிடுங்கள்.

* மனிதர்களைப் போலக் குதிரைகள், குரங்குகள், சிம்பன்சிகள், கரடிகள், முயல்கள் போன்ற விலங்குகளும் ஆப்பிளை விரும்பிச் சாப்பிடும்.

* சீனாவில் பெரியவர்களைப் பார்க்கப்போகும்போது மரியாதை செலுத்த ஆப்பிள் பழத்தை வாங்கிச் செல்வார்கள்.

ஆப்பிளைத் தண்ணீரில் போட்டால் மிதக்கும். இதற்குக் காரணம், ஆப்பிளில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கிறது.

Related Posts

Leave a Comment

Translate »