Breast-cancer-can-be-overcome-selfexamination_சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்

சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.

துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது.

* 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

* குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய்  பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் “மமோகிராம்’ (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

* குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Related Posts

Leave a Comment

Translate »