wrinkles-eye-massage-கண்களை சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்டுவது எப்படி

கண்களை சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்டுவது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக அளவில் கவனிப்புத் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பகுதிக்கு நாம் தேவையான அளவு கவனம் செலுத்துவதில்லை.

 இதனால் விரைவிலேயே வீங்கிய கண்கள், கரு வளையங்கள் மற்றும் சோர்வான கண்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, உங்கள் கண்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நீங்கள் இதுவரை எந்த சீரமும் உபயோகிக்கவில்லை என்றால் வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம். கரு வளையங்கள் ஏற்பட்ட கண்களுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது.

ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக்கி கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களைச் சரி செய்து சுருங்கிய சருமத்தை சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணெயில் உள்ள ரெட்டினோல் மற்றும் வைட்டமின் ஈ கண்களின் கீழ் உள்ள கருவளையங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது.

 வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையங்களைச் சரி செய்து சருமத்தினை புத்துயிர் பெறச் செய்ய உதவுகிறது.

7 தேக்கரண்டியளவு இனிப்பு பாதாம் எண்ணெய், 5 தேக்கரண்டியளவு ரோஸ்ஷிப் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய் எடுத்து பாட்டிலில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஷேக் செய்து கொள்ளுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்பு இந்த கலவையை எடுத்து மெதுவாக கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள்.

 இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள். இதனை இரண்டு வாரம் தொடர்ந்து செய்வதினால் நல்ல மாற்றத்தினை விரைவில் காணலாம்.

Related Posts

Leave a Comment

Translate »