தேவையான பொருட்கள்
மட்டன் கீமா – 150 கிராம்
வெங்காயம் – 1 + 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
சோம்பு – 1 டீஸ்பூன்
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு
பஜ்ஜி மாவு – தேவையான அளவு
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்றாக கழுவி வைக்கவும். ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை. கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.
வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும். பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம். வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.