தேவையான பொருட்கள்
ராஜ்மா – 1 கப்,
ஸ்வீட்கார்ன் – 1 கப்,
தக்காளி – 1
வெங்காயம் – 1,
வெங்காயத்தாள் – சிறிதளவு,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
புதினா இலை – சிறிது.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.
ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், எலுமிச்சை சாறு [பாட்டி மசாலா] மிளகுத்தூள், புதினா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
அருமையான ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.