red-rice-pepper-pongal_உடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்

உடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

 சிவப்பு அரிசி – ஒரு கப்,

பாசிப்பருப்பு – கால் கப்,

மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,

 முந்திரி – சிறிதளவு,

இஞ்சி – சிறிய துண்டு,

ப.மிளகாய் – 2,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கி, மிளகு, சீரகம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி தாளித்து, அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறினால், சிவப்பு அரிசி பொங்கல் தயார். சூப்பரான சத்தான சிவப்பு அரிசி மிளகு பொங்கல் ரெடி.

குறிப்பு :

முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி சிவப்பு அரிசியை சேர்த்து கொள்வது நல்லது.

Related Posts

Leave a Comment

Translate »