thoothuvalai-soup_உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்

உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலைகள் – 20,

கொத்தமல்லித்தழை – சிறிது,

சின்ன வெங்காயம் – 5,

 சீரகம் – 1/4 டீஸ்பூன்,

முழு பூண்டு – 4 பல்,

நெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.

செய்முறை :

 கொத்தமல்லி, தூதுவளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி இறக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடாக இருக்கும் போதே மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »