தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
பச்சைமிளகாய் – 2,
கேரட் – 1
பீன்ஸ் – 10,
பட்டாணி – ஒரு கைப்பிடி,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – சிறிதளவு,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
தண்ணீர்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும், அதில் வதக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
கோதுமை ரவை வெந்தவுடன் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.