dress-பெண்களுக்கான சமகாலத்திய உடைகள்

பெண்களுக்கான சமகாலத்திய உடைகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நம் நாட்டுப் பெண்கள் அணியக்கூடிய பாரம்பரிய உடைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பது புடவைகளாகத்தான் இருக்கும். பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய ஆடை வடிவமைப்புகள் புடவைகள், குர்தா செட், லெஹங்கா சோளி, சல்வார் கமீஸ், சுரிதார் உடைகள் இந்திய ஸ்டைல் ​​கவுன்கள், பாரம்பரிய உடகள், பாவாடைகள், குர்தா பைஜாமா, பலாஸ்ஸோ உடைகள், பாட்டியாலா சூட், ஹரேம் சூட், ஷராரா சூட், டோத்தி சூட்

சமகாலத்திய புடவைகள்

* காஞ்சீவரப் பட்டுப்புடவைகள்: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவை இந்த காஞ்சீவரப் பட்டுப்புடவைகள். காஞ்சீவரப் பட்டுப் புடவைகளிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பலவிதமான டிசைன்களும், பாணிகளும் வந்துவிட்டன.கதை பேசும் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு கருவை புடவையில் கொண்டுவந்து நெய்கிறார்கள்.காஞ்சிவரம் புடவைகள் என்றாலே மிகவும் கனமாக இருக்கும் என்று சொல்வதற்கு மாறாக இப்பொழுது லைட் வெயிட் புடவைகளும் வந்துவிட்டன.

* பனாரஸ் பட்டு புடவைகள்: புனித நகரமான வாரணாசியை பிறப்பிடமாகக் கொண்டவை பனாரஸ் பட்டு புடவைகள். இந்தப் புடவைகள் ஆடம்பரமான மற்றும் சிக்கலான வடிவமைப்புக்கு பெயர் பெற்றவையாகும்.. பாரம்பரிய பனாரஸ் புடவைகள் மிகவும் கனமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இப்பொழுது வரும் பனாரஸ் சேலைகள் கண்கவர் டிசைன்களில் கனம் குறைந்தவையாக வருகின்றன.

* சந்தேரி சில்க் புடவைகள்: கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் உடுத்தக்கூடிய வசதியான புடவைகளாக இவை இருக்கின்றன.

* சீக்வின் ஷிஃபான் புடவைகள்: மிகவும் கனம் குறைந்த அதே நேரத்தில் ஆடம்பர தோற்றத்தை தரக்கூடிய இந்த புடவைகளின் ரகத்திலேயே பெரும்பாலான பார்ட்டி புடவைகள் வருகின்றன.இந்த புடவைகளில் பலவிதமான எம்பிராய்டரி மற்றும் சம்கி வேலைப்பாடுகளுடன் வரும் புடவைகள் இன்றைய இளம் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.இந்த புடவைகளிலேயே நீளமான கவுன்களை தைத்து அணிந்து கொள்வதும் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. குர்த்தாக்கள்

* நவீன ஹை-லோ அனார்கலி குர்தா: முகலாய தோற்றம் கொண்ட அனார்கலி குர்த்தாக்கள் மார்பு பகுதியில் இறுக்கிப் பிடித்து இடுப்பிலிருந்து பரந்த ஃப்ளேர்களை கொண்டவையாக இருக்கும்.பாரம்பரிய அனார்கலி குர்திகள் எம்பிராய்டரி மற்றும் மிகவும் கனமான அலங்காரங்களை கொண்டவையாகும்..இப்பொழுது வரும் ஹை- லோ குர்திகள் மிகவும் ட்ரெண்டிங் ஆடையாக இருக்கின்றன. காட்டன், ஷிஃபான்,பட்டு, ஜார்ஜெட் என அனைத்து விதமான துணிகளிலும் கல்லூரி, அலுவலகம் மற்றும் சிறு விழாக்களுக்கு அணிந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

* A-லைன் குர்தா: A-லைன் வடிவத்துடன் பரந்த அடிப்பாகத்தை கொண்ட இவ்வகைக் குர்த்தாக்கள் அனார்கலி ஆடைகளுக்கு மாற்று என்று சொல்லலாம்.இந்த பிரபலமான நவீன பாணி ஆடைகள் தினசரி முதல் எப்போதாவது அணிவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மாடல்களில் வருகின்றன.இவை கணுக்கால் வரை இருக்கும் லெகிங்களுடன் அணிய ஏற்றவை.

* பிரிண்டட் ஸ்டிரெயிட் குர்தா: பல ஆண்டுகளாக பெண்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் இவை முதலிடம் பிடித்தவை என்றால் அது மிகையாகாது. லெக்கின்ஸ், பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என பலவிதமான கால்சட்டைகளுடன் அணிவதற்குப் பொருத்தமானவை இவை.கலம்காரி, இக்கத்,ஃபிளோரல்,ஜியாமெட்ரிகல் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்களுடன் வரும் இந்த ஸ்டிரெயிட் குர்தாக்களை அனைத்து உடல் வாகுடைய பெண்களும் அணியலாம்.

* லேயர்ட் குர்தா: ஒரே குர்த்தாவில் பல லேயர்கள் வருவது போல வடிவமைக்கப்பட்டு வருவது இப்பொழுது மிகவும் பிரபலமான பாணியாக உள்ளது. பெரும்பாலும் உட்புறம் வரும் லேயர்பிளெயின் கலரிலும் வெளிப்புறம் வரும் லேயர்கள் பிரிண்ட்களுடன் வருவது போலவும் வடிவமைக்கிறார்கள்.சில குர்தாக்களில் சுங்கங்கள் தொங்குவது போன்று தைய்த்திருப்பது கூடுதல் அழகைத் தருகின்றது.கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாக இவை இருக்கின்றன.

* சிக்கன்காரி குர்தா: லக்னோவின் வர்த்தக முத்திரைக்கு பெயர் பெற்றவை என்றால் அவை சிக்கன்காரி குர்தாக்களாகத்தான் இருக்க முடியும். பருத்தி, பட்டு மற்றும் ஷிஃபான் துணிகளில் வரும் இந்த ஆடைகளில் நுட்பமான நூல் வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.இவை பெரும்பாலும் வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலேயே வருகின்றன.கழுத்து, கைகள் மற்றும் ஹெம்லைன் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வரும் இந்த சிக்கன்காரி ஆடைகளுக்கு எப்பொழுதுமே பெண்களிடம் மவுசு அதிகம் என்று சொல்லலாம்.அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இவை ஏற்றவையாக இருக்கின்றன. பாட்டியாலா, லெகிங் மற்றும் நேரான பேண்ட்களுடன் அணிய ஏற்றவை.

லெஹங்கா சோளி

ரஃபிள்டு துப்பட்டாவுடன் வரும் மென்மையான நெட்டட் லெஹங்கா, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா கமீஸ்,ஃபாயில் பிரிண்ட்டுடன் கூடிய துடிப்பான வண்ணங்களில் வரும் லெஹங்கா, ஹெவி பிரைடல் எம்ப்ராய்டரி லெஹங்கா,ஸ்டைலான லெஹங்கா சோளி என லெஹங்காக்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மிகவும் டிரெண்டாகவும், அசத்தலாகவும் வந்திருக்கின்றன.

Related Posts

Leave a Comment

Translate »