முதுமை + தனிமை= கொடுமை !

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*முதுமை + தனிமை= கொடுமை !**பிள்ளையை… பெண்ணை… பெற்று, வளர்த்து, படிக்க வைத்து…, ஆளாக்கி…, மணமுடித்து… வைக்கிறோம்!**வேறு ஊரில்…, வேறு மாநிலத்தில்…, வேறு நாட்டில்… வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்…**இங்கு… 70 வயதிற்கு மேல்… வாழ்ந்த வீட்டிலேயே தனிமை…**இங்குதான் என் மகள் படிப்பாள்…**இங்குதான் விளையாடுவாள்…**என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்…**என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து….**என்ன சமைப்பது?…**என்ன சாப்பிடுவது?…**அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..**பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது…**தனிமை… வெறுமை…**அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்…**பயணம் ஒரு கொடுமை…**லோயர் பர்த் கிடைக்கவில்லை – என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்…**சென்னை சென்ட்ரல் – போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது…**ஓலாவும், ஊபரும்…*நமக்கு தேவைப்படும் நேரத்தில்,*பீக் hour சார்ஜ்*போட்டு களைப்படையசெய்கின்றனர்…*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்….*இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற… இறங்க… கைப்பிடி கேட்கிறது…**எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்…**வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*இவை வேண்டாமென ஒதுங்கி…*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்…**பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்…*என்றால்…அந்த நேரம் அவர்கள்…*ஏதோ ஒரு மாலில்…**ஏதோ ஒரு ஓட்டலில்…**ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்…**பிசியாக இருப்பார்கள்…**”ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா…” என்பார்கள்…**”இல்லை” என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்…**நாலு நாள் கழித்து…**”எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?” என்று கேட்பர்…*நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்…*அவர்கள் டைமிற்கு…**நம் தூக்க நேரம்…**பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!**நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்…,**அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.**மூன்று வயது வரைதான் தாத்தா… பாட்டி… என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்…**பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்…**அவன் வெளியே விளையாடறான்…**அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்…**அவன் டியூஷன் போயிருக்கான்…**யோகா போயிருக்கான்…**என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்…**எப்போதாவது குழந்தை முகம்… ஃபோனில்… வீடியோ காலில்…**முகத்தைக் காட்டி… ஹாய்… என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு…**ஓடி விடும்…**என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?…**நமது பண்பாடு… கலாச்சாரம்… தாத்தா பாட்டி உறவுகள்…**அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!…**எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது…?**இந்த அரசியல்களும்…**இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!…**என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…**ஏதோ… வாட்சப்… Facebook… இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது…!**மகனும், மகளும் போடும் Status-தான்… என் அன்றாட சுவாரசியங்கள்…**”எப்படிப்பா இருக்கே?” என்று மற்றவர்கள் கேட்கும்போது…*( விட்டுக் கொடுக்க முடியுமா… என் பிள்ளைகளை…)*”எனக்கென்னப்பா… ஜாம் ஜாம்ன்னு… பசங்களோட…, பேரனுங்களோட… அட்டகாசமா…”*( மனதுக்குள் *ஏதோ…*)*வாழ்கிறேன்!**பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு… இது சமர்ப்பணம்…!!!

Related Posts

Leave a Comment

Translate »