eating-while-standing-நின்றுகொண்டே சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...

நின்றுகொண்டே சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக ரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்று கொண்டே சாப்பிடும்போது உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து ரத்தம் மேல் நோக்கி செல்வதற்கு சிரமப்படும்.

 ரத்தத்தை மேல்நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோனான கார்டிசாலின் அளவை அதிகப்படுத்தும்.

தொடர்ந்து நின்று கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளும்போது ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதோடு உணவின் சுவையை அறியக்கூடிய உறுப்புகளின் உணர் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

நாளடைவில் உணவின் ருசியை அறியும் நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகி ருசித்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். சாப்பிடும்போது கால்களை மடக்கியவாறு தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சரியானது.

இந்த ஆய்வுக்கு 350 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டவர்களை விட நின்று கொண்டு சாப்பிட்டவர்களின் செயல்பாடுகளில் சீரற்றதன்மை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

Related Posts

Leave a Comment

Translate »