கேரட்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணற்ற குணநலன்களை கொண்டிருக்கிறது. இதே போன்று அழகு குறித்த பராமரிப்பிலும் அதிக அளவு உதவுகிறது. முகத்தின் கருமை நிறம் முதல் இளவயதிலேயே முகத்தில் உண்டாகும் சுருக்கம் வரை அனைத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கேரட்டுக்கு உண்டு.
எதற்கு எப்படி பயன்படுத்தினால் பலனை அழகாக பெற்றுவிடலாம் என்பதை தெரிந்துகொண்டால் போதும். தினம் ஒரு கேரட் வாழ்நாள் முழுக்க உங்கள் முகத்தை பேரழிகியாக காண்பிக்கும். கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு, ஆன்டி ஆக்சிடண்ட் எல்லாமே உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்ல சரும அழகுக்கும் உதவுகிறது.
உடலில் கொலாஜன் சுரப்பு குறைந்தால் சரும சுருக்கங்கள் எளிதில் அடையும். இந்த சுரப்புக்கு வைட்டமின் சி தேவை. கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவது தடுக்கப்படுகிறது. சருமம் ஜொலிஜொலிப்புடன் இருக்க தினம் ஒரு கேரட் சாறு குடித்தால் கூட போதும்.
கேரட் மாஸ்க் சருமத்தில் இருக்கும் மூன்று அடுக்கு வரை சென்று சுத்தம் செய்யகூடியது. 10 முறை ஃபேஸ் மாஸ்க் செய்து பொலிவு தரும் முகத்தை இந்த கேரட் மாஸ்க் ஒரே முறை தந்துவிடும். கேரட் பாதிஅளவு இருந்தால் போதும் கேரட்டை விழுதாக மசித்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும்.
தேவையெனில் காய்ச்சாத பால் சிறிது விட்டு முகம், கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், நிறம் உடனடியாக மறைவதை பார்க்கலாம்.
சிறந்த ஃபேஷியல் எஃபெக்ட் என்று சொல்லகூடிய பேக் இது. கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தின் எண்ணெய்பசையை அகற்ற உதவுவதோடு சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கிறது.
முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. கேரட் சருமத்தை மென்மையாக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை தளராமல் வைக்கிறது.
கேரட்- 1,
பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன்,
இரண்டையும் பாதி நிலையில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் தயிர், பன்னீர், எலுமிச்சை சேர்த்து கலந்து முகத்துக்கும், கழுத்துக்கும் பேக் போட்டு நன்றாக காயும் வரை விட வேண்டும். முகத்தை இறுக்கி பிடிக்கும் அளவு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச் பளிச்.
கேரட்டை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி அதனுடன் சமளவு பன்னீர், கற்றாழை சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். முகம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் ஸ்ப்ரேவை முகத்தில் அடித்து பஞ்சால் துடைத்து எடுத்தால் முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும்.
குறிப்பாக வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு கேரட் சாறு முகத்தில் அதிகப்படியான நன்மையை தரும். கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி லேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.